`பீட்சாவுக்காக 911 எண்ணை அழைக்கக் கூடாது’ - புகார் அளித்தப் பெண்ணை எச்சரித்த போலீஸ்

விகடன்  விகடன்
`பீட்சாவுக்காக 911 எண்ணை அழைக்கக் கூடாது’  புகார் அளித்தப் பெண்ணை எச்சரித்த போலீஸ்

பீட்சா வர காலதாமதமானதால் போலீஸில் பெண் ஒருவர் புகார் அளித்தச் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


பசி கண்மூடித்தனமான கோபத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக, கனடாவில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கனடா நாட்டில் உள்ள ஓன்டேரியா பகுதியில் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு உணவு சாப்பிடுவதற்காகத் தன்னுடையை 10 வயது மகனுடன் சென்றுள்ளார் 32 வயதான பெண் ஒருவர். அப்போது பீட்சாவை ஆர்டர் செய்து நீண்ட நேரமாகக் காத்திருந்தார். பீட்சா வரும் என எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நீண்ட நேரமாகக் காத்திருந்தும் பீட்சா வரவில்லை. பசியில் பீட்சா வர காலதாமதமானதால் கோபமடைந்த அந்தப் பெண் உடனே காவல்துறையைத் தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார். புகாரையடுத்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர், நடந்த சம்பவத்தைக் கேட்டறிந்தனர். இதையடுத்து, இது போன்ற சாதாரண விஷயங்களுக்கு காவல்துறையை அழைக்கக் கூடாது எனவும், 911 என்ற எண் அவசரத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனக் கூறி அந்தப் பெண்ணை எச்சரித்தனர்.

மூலக்கதை