தமிழகத்தில் மக்களை பற்றி கவலைப்படாத ஆட்சி நடக்கிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் மக்களை பற்றி கவலைப்படாத ஆட்சி நடக்கிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் மக்களை பற்றி கவலைப்படாத ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பின் ஸ்டாலின் கூறியுள்ளார். அரசு ஊழியர் போராட்டம், மாணவர்கள் போராட்டம் என தமிழகம் போராட்ட களமாகவே மாறிவிட்டது என்று அவர் கூறியுள்ளார். தூத்துக்குடி பெயரை சொன்னாலே சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மூலக்கதை