நிபாவை தொடர்ந்து கேரளாவை அச்சுறுத்தும் டெங்கு மற்றும் மலேரியா : சுகாதாரத்துறை எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
நிபாவை தொடர்ந்து கேரளாவை அச்சுறுத்தும் டெங்கு மற்றும் மலேரியா : சுகாதாரத்துறை எச்சரிக்கை

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக மாநில சுகாதார துறை அறிவித்திருந்த நிலையில், 14 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பரவிய நிபா வைரஸ் காரணமாக 15-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு உயிரிழந்தனர். பின்னர் கேரள அரசு எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் 14 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 180 பேருக்கு டெங்கு பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி கடந்த ஜுன் 1-ம் தேதியிலிருந்து இதுவரை 5 பேருக்கு மலேரியா பாதிப்பு இருப்பதும் உறுதியாகியுள்ளது. கொசுக்களால் பரவும் மற்றொரு நோய்க்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். மலைபகுதியான புதுக்காடியில் கோடை மழை பெய்யத் துவங்கியுள்ளதை அடுத்து பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் நோய் பாதிப்பு மேலும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் கவனத்துடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை