நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா! கல்வி நிறுவனங்களுக்கு 27-ம் தேதி உள்ளூர் விடுமுறை

விகடன்  விகடன்
நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா! கல்வி நிறுவனங்களுக்கு 27ம் தேதி உள்ளூர் விடுமுறை

நெல்லையப்பர் கோயிலின் ஆனித் திருவிழாவின் தேரோட்டத்தையொட்டி, நெல்லை மாவட்டம் முழுவதும் வரும் 27-ம் தேதி, உள்ளூர் விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயிலின் ஆனித் திருவிழா, ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் பங்கேற்க, நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் வருவார்கள். 27-ம் தேதி தேர்த் திருவிழா நடைபெற இருப்பதால், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’நெல்லையின் பிரசித்திபெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயிலின் ஆனித் திருவிழாவை முன்னிட்டு, 27-ம் தேதி புதன் கிழமையன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தேர்வுக்கு இடையூறு இல்லாமல், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக ஜூலை 14-ம் தேதி சனிக்கிழமை, அலுவலக வேலை நாளாகச் செயல்படும். 

இந்த விடுமுறை, செலாவணி முறைச் சட்டம் 1881-ன் கீழ் வழங்கப்படும் விடுமுறை கிடையாது என்பதால், விடுமுறை தினத்தன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள், அரசு செக்யூரிட்டிகள் தொடர்பான அவசரப் பணிகளைக் குறைந்தபட்ச பணியாளர்களைக்கொண்டு செயல்படும். பள்ளிகள், கல்லூரிகளில் நடைபெறும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை