அரசு பணிக்கான வயது 42 ஆக அதிகரிப்பு: அரியானா அரசு உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரசு பணிக்கான வயது 42 ஆக அதிகரிப்பு: அரியானா அரசு உத்தரவு

சண்டிகர்: அரசு பணிக்கான வயது வரம்பை 40ல் இருந்து 42 ஆக அரியானா அரசு உயர்த்தியுள்ளது. அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, அரசு பணிக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை பரிசீலனை செய்த அரியான அரசு, வயது வரம்பை உயர்த்துவதற்கான ஒப்புதல், கடந்த மாதம் 30ம் தேதியன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த அறிவிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது. அரசு பணியில் சேர்வதற்கான வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளதாகவும், இது 40ல் இருந்து 42 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அரியானா மாநில தலைமை செயலகத்தின் அனைத்து துறைகள், பொதுத்துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் உள்ளிட்டவைகளுக்கு இதுதொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசு பணியில் சேர வயது வரம்பு அதிகரிக்கப்பட்டதால், படித்துவிட்டு நீண்டகாலம் வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


.

மூலக்கதை