காங்கிரஸ், மஜத ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை நடக்கிறது: குறைந்த பட்ச செயல்திட்டம் குறித்து ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
காங்கிரஸ், மஜத ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை நடக்கிறது: குறைந்த பட்ச செயல்திட்டம் குறித்து ஆலோசனை

பெங்களூரு: காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை பெங்களூரில் கூடுகிறது.   கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் தேர்தல் முடிவுக்கு பின்னர் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக மஜத தலைவர் குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரசை சேர்ந்த பரமேஷ்வராவும் பதவியேற்றுள்ளனர்.

காங்கிரசுக்கு 22 அமைச்சர்களும் மஜதவுக்கு 12 அமைச்சர் இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 25 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

அமைச்சரவையில் இன்னும் 7 இடங்கள் காலியாக உள்ளது.

தேர்தல் பிந்தைய கூட்டணி ஆட்சி அமைத்த போதிலும் இரு கட்சிகளிடையே இலாகாக்களை பங்கிடுவதில் கருத்து வேறுபாடு உருவானது. இதனையடுத்து கருத்து வேறுபாடுகளை களைய ஒருங்கிணைப்பு குழுவை அமைப்பது என இரு கட்சிகளிடையே முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து மஜதவின் செயலாளர் டேனிஷ் அலி கூறி இருப்பதாவது: நாளை 14-ம் தேதி மாலை 4 மணி அளவில் இரு கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஷ்வரா, முன்னாள்முதல்வர் சித்தராமையா மற்றும் இரு கட்சிகளின் சார்பில் தலா ஐந்து உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.கூட்டத்தில் முக்கிய பிரச்னைகள் மற்றும் பொதுவான குறைந்த பட்ச திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் மாநிலங்களில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களுக்கு தலைவர்கள் நியமனம் செய்யப்படாமல் உள்ளது.

இது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறினார்.

.

மூலக்கதை