விராட் கோலி சவாலை ஏற்று உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டார் பிரதமர் மோடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
விராட் கோலி சவாலை ஏற்று உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்று, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். உடற்பயிற்சி செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், தான் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார்.

தன்னுடைய பிட்னஸ்க்கு பிரதமர் மோடி முன்னுதாரணமாக இருக்கிறார் என கூறியதுடன், கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, தோனி உள்ளிட்ட பிரபலங்கள் உடற்பயிற்சி குறித்த சவாலை ஏற்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து, தான் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை வெளியிட்ட விராட் கோலி, உடற்பயிற்சி சவாலை பிரதமர் மோடி ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த சவாலை ஏற்றுக்கொண்ட பிரதமர், விரைவில் பிட்னஸ் குறித்த வீடியோவை வெளியிடுவதாக கூறியிருந்தார். இந்நிலையில், தான் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை மோடி தற்போது வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் உடற்பயிற்சி செய்வது, வெறும் காலில் நடப்பது, யோகா, மூச்சுப்பயிற்சி செய்வது போன்றவை இடம்பெற்றுள்ளன. இந்த பயிற்சிகள் தனக்கு புத்துணர்வை தருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், கர்நாடக முதல்வர் குமாரசாமி, பிட்னஸ் சவாலை ஏற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

.

மூலக்கதை