உ.பியில் பஸ் கவிழ்ந்து 17 பேர் பலி: 35 பேர் படுகாயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உ.பியில் பஸ் கவிழ்ந்து 17 பேர் பலி: 35 பேர் படுகாயம்

மெயின்புரி: உத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகியுள்ளனர். 35 பேர் காயம் அடைந்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி அருகே தனியார் பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அதிகாலையில் சாலை வெறிச்சோடி கிடந்ததால் தனியார் பேருந்து அசுர வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாடை இழந்த பேருந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்தது.  

இந்த கோர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

35 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


.

மூலக்கதை