அமெரிக்காவின் (Loudoun County Public Library)லவுடன் பகுதி அரசு நூலகங்களில் தமிழ் நூல் சிறப்பு பகுதிக்கு 523 தமிழ்நூல்கள் வழங்கப்பட்டன...

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
அமெரிக்காவின் (Loudoun County Public Library)லவுடன் பகுதி அரசு நூலகங்களில் தமிழ் நூல் சிறப்பு பகுதிக்கு 523 தமிழ்நூல்கள் வழங்கப்பட்டன...

 

அமெரிக்காவின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் தமிழ் நூல்கள், தமிழ் திரைப்படங்கள் , ஆவணப்படங்கள் ஆகியவற்றிற்கெனதனி பகுதி உருவாக்கப்பட்டு அங்கே பொதுமக்கள்  பயன்படுத்தும் வகையில் சிறப்பாக இயங்கி வருகின்றன. குறிப்பாக ஜார்ஜியா , மேரிலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் இவைகளை சிறப்பாகசெயல்பட்டு வந்தாலும், வெர்ஜினியா மாநிலத்தில் இதுபோன்ற வசதிகள் இதுவரை இல்லை என்ற குறை இருந்துவந்தது. தற்போது அதிகரித்துவரும் தமிழ்ப்  பள்ளிகளின்  தேவையும் இதற்கு ஒரு அழுத்தத்தை கொடுத்துவருகிறது.  இதை உணர்ந்த  வள்ளுவன் தமிழ் மையம் இதற்கென குழு அமைத்து  நூலக நிர்வாகத்துடன் பேசி லவுடன் பகுதியில் (Loudon County Public Library)  புதிதாக திறக்கப்படவிருக்கும் Brambleton Library -ல் 523 தமிழ் நூல்களை திரட்டி வழங்கியுள்ளது. வெர்ஜினியா மாகாணத்தில் தமிழ் நூல்கள் பகுதி உள்ள முதல் நூலகமாக இது இருக்கும். இதைத் தொடர்ந்து அமெரிக்காவில்   தமிழர்கள் வசிக்கும் பல்வேறு நூலகங்களில் தமிழ்நூல்கள் பகுதி உருவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.  அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் குழந்தைகள் , இளைஞர்கள்,   இந்தியாவிலிருந்து வரும் உறவினர்கள் என்று அனைவரும் அவரவர்களுக்கு பிடித்த நூல்களை படிக்க வசதியாக இது அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது ..  இந்த தமிழ்நூல் வழங்கும் நிகழ்வில் வள்ளுவன் தமிழ்மையத்திலிருந்து வேல்முருகன் பெரியசாமி, பாஸ்கர் குமரேசன், அச்சுதன், ராம் வெங்கட், விஜய் சத்யா, சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி துரைசாமி, சுதா தில்ராஜ் , அன்னபூரணி சுரேஷ்  , ஆகியோர் கலந்துகொண்டனர். 


அமெரிக்காவின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் தமிழ் நூல்கள், தமிழ் திரைப்படங்கள் , ஆவணப்படங்கள் ஆகியவற்றிற்கெனதனி பகுதி உருவாக்கப்பட்டு அங்கே பொதுமக்கள்  பயன்படுத்தும் வகையில் சிறப்பாக இயங்கி வருகின்றன. குறிப்பாக ஜார்ஜியா , மேரிலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் இவைகளை சிறப்பாகசெயல்பட்டு வந்தாலும், வெர்ஜினியா மாநிலத்தில் இதுபோன்ற வசதிகள் இதுவரை இல்லை என்ற குறை இருந்துவந்தது. தற்போது அதிகரித்துவரும் தமிழ்ப்  பள்ளிகளின்  தேவையும் இதற்கு ஒரு அழுத்தத்தை கொடுத்துவருகிறது.  இதை உணர்ந்த  வள்ளுவன் தமிழ் மையம் இதற்கென குழு அமைத்து  நூலக நிர்வாகத்துடன் பேசி லவுடன் பகுதியில் (Loudon County Public Library)  புதிதாக திறக்கப்படவிருக்கும் Brambleton Library -ல் 523 தமிழ் நூல்களை திரட்டி வழங்கியுள்ளது. வெர்ஜினியா மாகாணத்தில் தமிழ் நூல்கள் பகுதி உள்ள முதல் நூலகமாக இது இருக்கும். இதைத் தொடர்ந்து அமெரிக்காவில்   தமிழர்கள் வசிக்கும் பல்வேறு நூலகங்களில் தமிழ்நூல்கள் பகுதி உருவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

 
அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் குழந்தைகள் , இளைஞர்கள்,   இந்தியாவிலிருந்து வரும் உறவினர்கள் என்று அனைவரும் அவரவர்களுக்கு பிடித்த நூல்களை படிக்க வசதியாக இது அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 .. 
இந்த தமிழ்நூல் வழங்கும் நிகழ்வில் வள்ளுவன் தமிழ்மையத்திலிருந்து வேல்முருகன் பெரியசாமி, பாஸ்கர் குமரேசன், அச்சுதன், ராம் வெங்கட், விஜய் சத்யா, சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி துரைசாமி, சுதா தில்ராஜ் , அன்னபூரணி சுரேஷ்  , ஆகியோர் கலந்துகொண்டனர். 

மூலக்கதை