இலங்கை பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கை பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக  வெள்ள அனர்த்த நிலைமைகளுக்கு மத்தியில் தொற்றுநோய்களைத் தடுக்க பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
சுகாதாரத் துறையினர் இது தொடர்பில் அறிவுறுத்தியுள்ளனர்.
 
வயிற்றோற்றம் முதலான நோய்களைத் தவிர்ப்பதற்காக கொதித்தாறிய நீரைப் பருகுமாறு தொற்றுநோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்தியர் பபா பலிஹவதன தெரிவித்துள்ளார்.
 
 சீரற்ற வானிலை காரணமாக சுவாசம் சார்ந்த நோய்கள் மற்றும் எலிக் காய்ச்சல் என்பன பரவும் அபாயம் தொடர்பிலும் அவதானத்துடன் இருக்குமாறு தெரிவித்துள்ளார்.
 
வெள்ளநீர் உட்புகுவதனால் கிணறுகள் அசுத்தமடைந்துள்ளன. எனவே, சுத்தமான குடிநீரையோ அல்லது கொதித்தாறிய நீரையோ பருக வேண்டும்.
 
ஏனெனில், நீரின் மூலம் நோய்கள் பரவும் நிலைமையே அதிகளவில் உள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
காய்ச்சல் தடிமன் உள்ளிட்ட நோய் நிலைமைகள் ஏற்படுமாயின் உடனடியானக வைத்திய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தொற்றுநோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்தியர் பபா பலிஹவதன தெரிவித்துள்ளார்.

மூலக்கதை