உள்துறை அமைச்சகம் தகவல்: பெண்கள் பாதுகாப்பு அம்சங்களை கண்காணிக்க சிறப்பு குழு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உள்துறை அமைச்சகம் தகவல்: பெண்கள் பாதுகாப்பு அம்சங்களை கண்காணிக்க சிறப்பு குழு

புதுடெல்லி: பெண்களின் பாதுகாப்பு அம்சங்களை கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், சிறப்பு குழு ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதை தடுக்க போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

சீனியர் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் இயங்கும் இந்த குழுவானது பெண்களின் பாதுகாப்பு குறித்து சம்மந்தப்பட்ட அமைச்சம், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தும்.   பெண்கள், குழந்தைகள், பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு வழங்கப்படும்  நிர்பயா நிதி உள்ளிட்டவை குறித்து அறிக்கை அளிக்கும் இக்குழு, இவைகளை முறையாக நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கும்.

மேலும், பெண்களின் பாதுகாப்பு பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவில் விசாரிக்கும் வகையிலான நடவடிக்கைகளை இந்த சிறப்பு குழு மேற்கொள்ளும் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறினர்.   

.

மூலக்கதை