பள்ளி விடுமுறையில் துபாய் இப்தார் நிகழ்ச்சியில் நண்பர்களுடன் சேவையாற்றும் தமிழ் மாணவ சிறுவன் ஆதித்யா ஸ்ரீராம்

தினகரன்  தினகரன்
பள்ளி விடுமுறையில் துபாய் இப்தார் நிகழ்ச்சியில் நண்பர்களுடன் சேவையாற்றும் தமிழ் மாணவ சிறுவன் ஆதித்யா ஸ்ரீராம்

சேவையாற்றும் நல்லுள்ளங்களுக்கு வயது, மதம்,மொழி கிடையாது என்பதை நிரூபித்துள்ளனர் சின்னஞ்சிறு பள்ளி மாணவர்கள். துபாயில் கல்வி பயின்று வரும் தமிழகத்தை மாணவர் சிறுவன் ஆதித்யா ஸ்ரீராம் தனது தந்தை ஸ்ரீராம் மற்றும் பள்ளி நண்பர்களுடன் தமிழர்கள் நிர்வாகிகளாக உள்ள‌ ஈமான் கல்ச்சுரல் சென்டர் நடத்தி வரும் இப்தாரில் நிகழ்ச்சியில் தன்னார்வத்துடன் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான பணிகளில் தங்களை ஈடுபத்தி அனைவரின் பாரட்டையும் பெற்றார்.துபாயில் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் ஆண்டுதோறும் ரமலான் மாதம் முழுவதும்  பள்ளிவாசல் அமைந்துள்ள‌ தேரா பகுதியில் தினந்தோறும் இப்தார் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதில் தினமும் ஒரே பகுதியில் 4  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்தோர் அதிகளவில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் சேவையாற்றுவதற்கு 50க்கும் மேற்பட்ட ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் தன்னார்வல தொண்டர்கள் செயல்படுகின்றனர்.இதனை அறிந்த துபாயில் கல்வி பயின்று வரும்  தமிழகத்தை மாணவர் சிறுவன் ஆதித்யா ஸ்ரீராம் தனது தந்தை ஸ்ரீராம் மற்றும் பள்ளி நண்பர்களுடன்  பள்ளி வார‌ விடுமுறையையோட்டி  இப்தார் நடைபெறும் நிகழ்விடத்திற்கு சென்று அங்குள்ள தன்னார்வலர்களோடு சேர்ந்து அங்கு இப்தாருக்கு வருபவர்கள் தேவையான ஏற்பாடுகளில் தங்களையும் ஈடுபடுத்தி கொண்டனர்.சின்னசிறு மாணவ மாணவியரின் மனித நேய‌ சேவையையும் இவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோரையும் துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் அமைப்பின் தலைவர் ஹபீபுல்லா பொது செயலாளர் ஹமீது யாசின் ஊடகத்துறை செயலாளர் ஹிதயாத்துல்லா உள்ளிட்டோர் மற்றும் ஈமான் நிர்வாகத்தினர் பாராட்டினர். மாணவர் சிறுவன் ஆதித்யா சமீபத்தில் ஷார்ஜா அரசின் சிறப்பு விருது பெற்றது குறிப்பிடதக்கது.

மூலக்கதை