கேரளாவில் நிபா வைரஸ் பீதியால் சுற்றுலாத்துறை கடும் பாதிப்பு

தினகரன்  தினகரன்
கேரளாவில் நிபா வைரஸ் பீதியால் சுற்றுலாத்துறை கடும் பாதிப்பு

திருவனந்தபுரம்: நிபா வைரஸ் காய்ச்சல் அச்சத்தால் கேரளாவில் சுற்றுலாத்துறை கடுமையான பாதிப்புக்கு தள்ளப்பட்டுள்ளது. நிபா வைரஸ் அச்சத்தால் வலைகுடா நாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் கேரளா வர இருந்தவர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். கேராளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதால் அங்கு செல்வதை தவிர்க்குமாறு வலைகுடா நாடு தங்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதுவரை நிபா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.பயணிகள் வரத்து குறைவால் தினசரி ரூ.30-ரூ.40 லட்சம் வரை இழப்பு ஏற்படுவதாக விடுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் வர முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகள் கூட அதனை ரத்து செய்து வருவதாக விடுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நிலைமையை சமாளிப்பது குறித்து கேரள அரசின் சுற்றுலாத்துறை அவசர கூட்டம் ஒன்றை நாளை நடத்த உள்ளது.

மூலக்கதை