சரக்கு போக்குவரத்து துறையில் 30 லட்சம் வேலைவாய்ப்புகள்

தினமலர்  தினமலர்
சரக்கு போக்குவரத்து துறையில் 30 லட்சம் வேலைவாய்ப்புகள்

புதுடில்லி: சரக்கு போக்­கு­வ­ரத்து துறை­யில், அடுத்த நான்கு ஆண்­டு­களில், புதி­தாக, 30 லட்­சம் வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும் என, ஆய்­வொன்­றில் தெரி­ய­வந்­துள்­ளது.
இது குறித்து, ‘டீம் லீஸ்’ நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:ஜி.எஸ்.டி., அம­லாக்­கம் மற்­றும் அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­க­ளுக்­காக அதிக அள­வில் மேற்­கொள்­ளப்­படும் முத­லீ­டு­கள் போன்­ற­வற்­றால், சரக்கு போக்­கு­வ­ரத்து துறை­யில் வேலை­வாய்ப்­பு­கள் அதி­க­ரிக்­கும்.தற்­போது, சாலை, ரயில், விமா­னம், நீர்­வ­ழிப் பாதை, கிடங்­கு­கள், பேக்­கிங் மற்­றும் கூரி­யர் சேவை­கள் சார்ந்த சரக்கு போக்­கு­வ­ரத்து மூலம், 1.௦9 கோடி பேர் வேலை­வாய்ப்பு பெற்­றுள்­ள­னர். இது, அடுத்த நான்கு ஆண்­டு­களில் உரு­வா­கும், 30 லட்­சம் புதிய வேலை­வாய்ப்­பு­கள் மூலம், 1.39 கோடி­யாக அதி­க­ரிக்­கும். சாலை வழி சரக்கு போக்­கு­வ­ரத்­தில், 18.90 லட்­சம் வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும். ரயில்­வே­யில், 40 ஆயி­ரம்; விமான துறை­யில், நான்கு லட்­சம்; நீர்­வழி தடத்­தில், 4.50 லட்­சம் வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும். சரக்கு போக்­கு­வ­ரத்தை, அடிப்­படை கட்­ட­மைப்பு துறை­யில் சேர்த்­த­தும், அத்­துறை சார்ந்த திட்­டங்­க­ளுக்கு, ஆறு லட்­சம் கோடி ரூபாய் அரசு ஒதுக்­கு­வ­தா­லும், புதிய வேலை­வாய்ப்­பு­கள் பெரு­கும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை