இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட்: முன்னிலை பெற்றது பாகிஸ்தான்

தினகரன்  தினகரன்
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட்: முன்னிலை பெற்றது பாகிஸ்தான்

லண்டன்: இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இந்த போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 184 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (58.2 ஓவர்). தொடக்க வீரர் அலஸ்டர் குக் 70, பேர்ஸ்டோ 27, ஸ்டோக்ஸ் 38, பட்லர் 14 ரன் எடுக்க, கேப்டன் ஜோ ரூட் உட்பட மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் அப்பாஸ், ஹசன் அலி தலா 4, ஆமிர், பாஹீம் அஷ்ரப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான், முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன் எடுத்திருந்தது. அசார் அலி 18, ஹாரிஸ் சோகைல் 21 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். சோகைல் 39, அசார் அலி 50 ரன்னில் வெளியேற, ஆசாத் ஷபிக் 59 ரன் விளாசி பெவிலியன் திரும்பினார். பாகிஸ்தான் அணி 75 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 2134 ரன் எடுத்திருந்தது. பாபர் ஆஸம் 52 ரன், கேப்டன் சர்பராஸ் அகமது 2 ரன்னுடன் களத்தில் இருந்தனர். முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் பெரிய ஸ்கோர் அடிக்கும் வாய்ப்பு உள்ளதால், இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை