பெண் சீடரை பலாத்காரம் செய்த வழக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயாவுக்கு கைது வாரன்ட்: உ.பி நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
பெண் சீடரை பலாத்காரம் செய்த வழக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயாவுக்கு கைது வாரன்ட்: உ.பி நீதிமன்றம் உத்தரவு

ஷாஜகான்பூர்: பெண் சீடரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவரக் கூடிய கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பாஜ.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தா. உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவர், ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் மீது இவரது பெண் சீடர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். அதில், ‘சுவாமி சின்மயானந்தா என்னை ஆசிரமத்தில் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் கர்ப்பமான என்னை கருக்கலைப்பு செய்ய மிரட்டினார்’ என கூறியுள்ளார்.  இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்ய கூடாது என  அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சின்மயானந்தா தடை பெற்றிருந்தார். இந்த நிலையில், உத்தரபிரதேச மாநில அரசு சின்மயானந்தா மீதான பாலியல் பலாத்கார வழக்கை திரும்ப பெறுவதற்கான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கு  பாதிக்கப்பட்ட பெண் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது அரசின் மனுவை நிராகரித்த நீதிபதி, சின்மயானந்தா மீது ஜாமீனில் வெளிவரக் கூடிய கைது வாரன்டை பிறப்பித்தார். மேலும், இந்த வழக்கு விசாரணை ஜூலை 12ம் தேதி நடைபெறும்போது, சின்மயானந்தாவை ஆஜர்படுத்த வேண்டும்  என நீதிபதி உத்தரவிட்டார்.

மூலக்கதை