காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் மகாராஷ்டிரா எம்எல்ஏக்கள் உயிர் தப்பினர்

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் மகாராஷ்டிரா எம்எல்ஏக்கள் உயிர் தப்பினர்

மும்பை: காஷ்மீருக்கு சுற்றுலா சென்றபோது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மகாராஷ்டிரா எம்எல்ஏக்கள் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தாக்குதலில் உள்ளூர் மக்கள் 10 பேர் காயமடைந்தனர்.   மகாராஷ்டிரா சட்டப்பேரவை சார்பில் காஷ்மீருக்கு எம்எல்ஏக்கள் 7 நாட்கள் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுதிர் பார்வே (பா.ஜனதா), சிவசேனாவை சேர்ந்த துக்காராம் கதே, கிஷோர் பாட்டீல், தேசியவாத காங்கிரசை சேர்ந்த தீபக் சவான், விக்ரம் காலே ஆகிய 5 எம்எல்ஏக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும்  சட்டப்பேரவை மூத்த அதிகாரிகள் 5 பேருடன் சென்றிருந்தனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களின் பாதுகாப்புடன் எம்எல்ஏக்கள் நகரில் இருந்து அனந்த்நாக் சென்றபோது ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அது குறி தவறி சற்று தொலைவில் விழுந்து வெடித்தது. இதில் வாகனத்தின் டயர் பஞ்சரானதுடன், கண்ணாடிகளும் உடைந்தன. அதிஷ்டவசமாக வாகனத்தில் இருந்த எம்.எல்.ஏ.க்களுக்கு காயம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் 10 பேர் காயமடைந்தனர்.

மூலக்கதை