இலங்கை டெஸ்ட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் டிவோன் ஸ்மித்

தினகரன்  தினகரன்
இலங்கை டெஸ்ட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் டிவோன் ஸ்மித்

டிரினிடாட்: இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில், முன்வரிசை பேட்ஸ்மேன் டிவோன் ஸ்மித் 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இடம் பிடித்துள்ளார். அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்யும்   இலங்கை அணி, மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் ஜூன் 6ம் தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட் செயின்ட் லூசியாவிலும் (ஜூன் 14-18), கடைசி டெஸ்ட் பார்படாஸ், கென்சிங்டன் ஓவல் மைதானத்திலும் (ஜூன் 23-27) நடைபெற உள்ளன. இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான அணியில் மொத்தம் 13 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முன்வரிசை பேட்ஸ்மேனான டிவோன் ஸ்மித் (36 வயது), 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தேசிய அணியில் இடம் பிடித்துள்ளார். புதுமுக விக்கெட் கீப்பர் ஜாமர் ஹாமில்டனுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சுனில் அம்ப்ரிஸ், பிளாக்வுட், அல்ஜாரி ஜோசப், ரேமன் ரீபர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), தேவேந்திர பிஷூ, கிரெய்க் பிராத்வெயிட், ரோஸ்டன் சேஸ், மிகுவல் கம்மின்ஸ், ஷேன் டோவ்ரிச் (விக்கெட் கீப்பர்), ஷேனன் கேப்ரியல், ஜாமர் ஹாமில்டன் (விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மயர், ஷாய் ஹோப், கெய்ரன் பாவெல், கெமார் ரோச், டிவோன் ஸ்மித்.

மூலக்கதை