சாதிக்கும் முனைப்பில் அன்னையர்!

தினகரன்  தினகரன்
சாதிக்கும் முனைப்பில் அன்னையர்!

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ் (36 வயது, அமெரிக்கா), விக்டோரியா அசரென்கா (28 வயது, பெலாரஸ்) இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்க உள்ளனர். இருவரும் குழந்தை பெற்றுக்கொண்டு தாயான பிறகு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைக்கும் முனைப்புடன் உள்ளதால், பிரெஞ்ச் ஓபனில் இவர்கள் மீதான எதிர்பார்ப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. மகளிர் ஒற்றையர் தரவரிசையில் தற்போது செரீனா 453வது இடத்திலும், அசரென்கா 82 வது இடத்திலும் பின்தங்கியுள்ள நிலையில், தகுதிநிலையில் இடம் பெறாத வீராங்கனைகளாக பிரெஞ்ச் ஓபனில் விளையாட உள்ளனர். ரோலண்ட் கேரோஸில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்ட செரீனா, அசரென்கா.

மூலக்கதை