தூத்துக்குடி சம்பவம் போன்று இந்தியாவில் நடப்பது வாடிக்கை துணை சபாநாயகர் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தூத்துக்குடி சம்பவம் போன்று இந்தியாவில் நடப்பது வாடிக்கை துணை சபாநாயகர் பேட்டி

கோவை: கோவை விமானநிலையத்தில் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று அளித்த பேட்டி: சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் திடீரென கூட்டதை விட்டு வெளியே சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். எதிர்கட்சி தலைவராக செயல்படுவதை எடுத்துக்காட்டவே இவ்வாறு ஸ்டாலின் செய்துள்ளார்.
தூத்துக்குடியில் தமிழக காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர், எனவே துணை ராணுவத்தை அழைக்க வேண்டிய தேவையில்லை.

மக்களை துன்புறுத்தும் எண்ணம் அதிமுகவிற்கு கிடையாது. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் மனவேதனை அளிக்கிறது.

அதே வேளையில் போராட்டகாரர்கள் என்ன செயலில் ஈடுபட்டார்கள், போலீசார் ஏன் துப்பாக்கி சூடு நடத்தினார்கள் என்பது குறித்து ஒரு நபர் கமிஷன் விசாரணையின் முடிவில் தான் தெரியும்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான் காவல்துறை உள்ளது. காவல்துறையை யாரும் மட்டம் தட்டக்கூடாது.

தூத்துக்குடிக்கு அமைச்சர்கள் நிச்சயம் செல்வார்கள். இதில் எந்த தயக்கமும் இல்லை.

முதல்வரின் ஓராண்டு ஆட்சியில் இப்போது தான் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டில் எங்கோ ஒரு பகுதியில் ஏதோ ஒரு சம்பவம் நடந்து கொண்டு தான் இருக்கும். சம்பவங்கள் நடைபெறாமல் இருக்காது.

அது போலதான் இந்த தூத்துக்குடி சம்பவமும்.

.

மூலக்கதை