திருவாரூரில் 27ம் தேதி ஆழித்தேரோட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவாரூரில் 27ம் தேதி ஆழித்தேரோட்டம்

திருவாரூர்:  திருவாரூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயில் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர். இக்கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே 2வது மிகப்பெரிய தேர் என்பது சிறப்பு.

கோயிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும், பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலயகுளத்தில் தெப்பதிருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு விழா துவக்கத்திற்காக கொடியேற்றும் நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி நடந்தது. இந்நிலையில் தியாகராஜ சுவாமி  தனக்கே உரிய அஜபா நடனத்துடன் ஆழித்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி கடந்த 20ம் தேதி இரவு நடைபெற்றது.

அன்று முதல்  தியாகராஜருக்கு தேரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆழித்தேரோட்டம் நாளைமறுதினம் (27ம் தேதி) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள்  நடைபெறுகிறது.

தற்போது தேர் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை