தூத்துக்குடி துப்பாக்கி சூடு எதிரொலி முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ் வீடுகளில் போலீஸ் குவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு எதிரொலி முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ் வீடுகளில் போலீஸ் குவிப்பு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு எதிரொலியாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வீடுகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்ேகாரி கடந்த 100 நாட்களாக அப்பகுதி மக்கள் தொடர் ேபாராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த செவ்வாய் கிழமை ஆலையை மூடக்ேகாரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் பெண்கள் உட்பட 13 ேபர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். தடை உத்தரவை மீறி திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர், நடிகர் கமல் உள்ளிட்ட தலைவர்கள் போலீசாரின் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியால் மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வரும் பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

ஆனால் இன்று வரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் யாரும் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை சந்திக்க வில்லை.

இதனால் பொதுமக்கள் ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் வீடுகளை முற்றுகை போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுதுறை போலீசார் எச்சரித்தனர். அதைதொடர்ந்து இன்று அதிகாலை முதல் அடையார் கிரீன் வேஸ் சாலையில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர விசாரணைக்கு பிறகு அப்பகுதியில் வாகனங்களை அனுமதிக்கின்றனர்.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் கான்வாயை மறித்து போராட்டம் நடத்தப்படலாம் என்பதால் கோட்டை முதல் கிரீன்வேஸ் சாலை வரை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வழக்கத்தை விட கூடுதலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வீடுகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல், மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் எந்த நேரத்திலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து அந்தந்த துணை கமிஷனர்கள் தலைமையில் போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மெரினா கடற்கரையில் உள்ள சர்வீஸ் சாலையை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

.

மூலக்கதை