திமுக போராட்டத்தின் மூலம் பேசாத எடப்பாடியையும் பேச வைத்துள்ளோம் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
திமுக போராட்டத்தின் மூலம் பேசாத எடப்பாடியையும் பேச வைத்துள்ளோம் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

காஞ்சிபுரம்: தூத்துக்குடியில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்தாது என்பது கூட தெரியவில்லை. திமுக போராட்டத்தின் மூலம் பேசாத எடப்பாடியையும் பேச வைத்துள்ளோம் என்று திருமண விழாவில் மு. க. ஸ்டாலின் பேசினார்.

மதுராந்தகம் நகர திமுக செயலாளராக உள்ள கே. குமார்-மலர்விழி குமார் தம்பதியின் மகள் மோகனவள்ளி (எ) மவுனிகா என்பவருக்கும், அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கே. கண்ணன்-கவுரி கண்ணன் ஆகியோரின் மகன் பிரகாஷ் என்பவருக்கும் இன்று காலை 9 மணிக்கு அச்சிறுப்பாக்கம் ேதசிய நெடுஞ்சாலை, நடுப்பழனி ஆர்ச் அருகே உள்ள மோனலட்சுமி திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையேற்று, திருமணத்தை நடத்தி வைத்தார்.

இதில், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி எம்பி, எம்எல்ஏக்கள் புகழேந்தி, எழிலரசன், ஆர். டி. அரசு, ஒன்றிய செயலாளர்கள் சத்தியசாய், ஏழுமலை, தம்பு, கே. எஸ். ராமச்சந்திரன், தரன் மற்றும் நிர்வாகிகள் சிவகுமார், எழிலரசு, பொன்மலர் சிவகுமார், உசேன், விஜயகணபதி, ஜியாவுதீன், ஜெயப்பிரகாஷ், சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் மணமக்களை வாழ்த்தி மு. க. ஸ்டாலின் பேசியதாவது: 1967ம் ஆண்டு அண்ணா முதல்வராக பொறுப்பேற்ற போது, சட்டசபையில் 3 தீர்மானங்களை கொண்டு வந்தார். அவைகள், தமிழ்நாடு பெயர் மாற்றம், இருமொழி கொள்கை, சீர்திருத்த திருமணம் சட்டபடி செல்லும் என்பதுதான்.



முன்பு, சுயமரியாதை திருமணம் செய்தால் கேலி, கிண்டல் செய்வார்கள். தற்போது, இந்த திருமணம் அதிகளவில் நடைபெறுவதால், மக்கள் ஏற்று கொள்ளும் நிலைக்கு வந்துள்ளனர்.

ஆதிபராசக்தி மக்கள் இயக்க தலைவர் அன்பழகன் பேசும்போது, நாம் விரைவில் ஆட்சி அமைக்க போகிறோம் என்று கூறினா. வசிஷ்டர் சொன்னால் பலிக்கும் என்பது போல் அவர் மட்டுமல்ல, நாடே ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து ெகாண்டிருக்கிறது.

தமிழகமே தற்போது போராட்டக்களமாக மாறி வருகிறது. தூத்துக்குடி சம்பவத்தில் 14 உயிர்கள் பலியானதற்கு, ‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்று தலைமை செயலகத்தில் உள்ளிருப்பு ேபாராட்டம் செய்ய சென்றோம்.

அப்போது, கைது செய்தார்கள். அதற்கு பிறகு, திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுதலை செய்தார்கள்.

முதல்வர் பேட்டியளிக்கும்போது, ‘‘என்னை சந்திக்க நேரம் கேட்டிருந்தால் ஒதுக்கி தந்திருப்பேன்’’ என்று தெரிவித்தார். அவரிடம் கோரிக்கை வைக்கவோ, மனு கொடுக்கவோ நாங்கள் செல்லவில்லை.   தூத்துக்குடி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பதவி விலக வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ேடாம்.

எங்களை ைகது செய்து சிறையில் அடையுங்கள் என்றால் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுதலை செய்கிறீர்கள். சிறையில் இடம் இல்லை.

சிறைக்கு செல்ல அஞ்ச மாட்டோம். மிசா சட்டத்தையே எதிர்த்து போராடியவர்கள்.

ஊழல் செய்து விட்டோ, கொள்ளையடித்து விட்டோ சிறைக்கு செல்லவில்லை. மக்களின் உரிமைகளுக்காக சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறோம்.

பலபேர் ஊழல் செய்துவிட்டு சிறையில் இருக்கிறார்கள். தற்போது செய்துள்ள ஊழல்களுக்காகவும் சிறைக்கு செல்ல இருக்கிறார்கள்.

திமுக உள்ளிட்ட 9 கட்சிகள், இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது.

நான் சென்னையிலோ அல்லது சென்னைக்கு அருகிலோ போராட்டத்தில் கலந்து ெகாண்டிருக்க வேண்டும்.

இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு போகும் வழியில் கூட எங்கேயாவது ஒரு போராட்டத்தில் கலந்து ெகாள்வேன். இந்த போராட்டத்தின் வாயிலாக பேசாத எடப்பாடி பழனிசாமியை பேச வைத்துள்ளோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு இருக்கும்போது, எதிர்க்கட்சி தலைவர் போனதால் அவர் மீது வழக்கு போட்டிருக்கிறோம் என்று எடப்பாடி கூறுகிறார். ஆனால் ஒரு முதல்வர் சென்று பார்த்திருக்கலாமே என்று கேட்டால், அங்கு 144 தடை உத்தரவு போட்டிருக்கிறது என்கிறார்.

ஒரு முதல்வர் போகலாம் என்ற சராசரி அறிவுகூட எடப்பாடிக்கு இல்லை. பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது பற்றி கேட்டால், தற்காப்புக்காக சுட்டார் என்று எடப்பாடி சொல்கிறார்.

எனவே, ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்துவதை விட்டு, உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த ேவண்டும். தூத்துக்குடிக்கு நான் சென்றபோது, ‘‘நாங்கள் நிம்மதியாக இருக்க கலெக்டர், எஸ். பி. யை மாற்ற வேண்டும்’’’ என்றார்கள்.

தற்போது முகாமிட்டுள்ள அதிகாரிகளிடம் பேசினேன். 2 அதிகாரிகள் மாற்றம் என்று தகவல் வந்தது.

அந்த அதிகாரிகளை ராமநாதபுரத்திற்கோ அல்லது தண்ணி இல்லாத காட்டுக்கோ மாற்றியிருக்க வேண்டும். ஆனால், சென்னைக்கு மாற்றியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர மக்கள் விரும்புகிறார்கள். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

.

மூலக்கதை