‘முன் எச்சரிக்கை கைது இல்லை’ தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை: ஆட்சியர் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘முன் எச்சரிக்கை கைது இல்லை’ தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை: ஆட்சியர் பேட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதனால் போர்க்களமானது தூத்துக்குடி நகரம்.

கடந்த 3 நாட்களாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர இயலாத நிலை இருந்தது.

உணவுக்கு வழியின்றி பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவமனை நோயாளிகளும் தவித்தனர். 3 நாட்களுக்கு பிறகு இன்று சகஜ நிலை திரும்ப தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று காலை அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தார்.

அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து அம்மா உணவகத்தில் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளேன். இன்று காலை நெல்லை, திருச்செந்தூர், மதுரை ஆகிய இடங்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளது.

மதியத்திற்கு பிறகு படிப்படியாக பஸ்கள் இயக்கப்படும். நேற்று விட இன்று இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.

நகரில் 50 சதவீத கடைகள் திறப்பட்டு உள்ளன. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இனி யாரையும் கைது செய்ய மாட்டோம். பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

ரோந்து பணிகள் மாவட்டத்தில் முழுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கப்படும்.

.

மூலக்கதை