இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 68.20

தினமலர்  தினமலர்
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 68.20

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் தொடர்ந்து 2 வது நாளாக இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க டாலரை அதிகம் விற்பனை செய்ததால், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (மே 25, காலை 9.15 மணி) 14 காசுகள் உயர்ந்து 68.20 ஆக உள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்ததை அடுத்து சர்வதேச நாடுகளின் கரென்சி மதிப்பிற்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு கடுமையாக சரிந்ததுள்ளது. இதன் காரணமாக பிற நாட்டு நாணயங்கள் இந்திய ரூபாயை ஆதரித்தன் விளைவாகவும், இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளதாலும் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.

நேற்றைய வர்த்தக நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.34 ஆக இருந்தது.

மூலக்கதை