முதன் முறையாக - விளாதிமிர் புட்டினுடன் இம்மானுவல் மக்ரோன் இரஷ்யாவில் சந்திப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
முதன் முறையாக  விளாதிமிர் புட்டினுடன் இம்மானுவல் மக்ரோன் இரஷ்யாவில் சந்திப்பு!!

இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினை சந்திக்கின்றார். 
 
இருநாட்கள் சுற்றுப்பயணமாக இம்மானுவல் மக்ரோன் இன்று இரஷ்யா பயணமாகின்றார். இரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான Saint Petersburg நகரில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது. மக்ரோன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர், முதன்முதலாக இரஷ்யா பயணமாகின்றார். Saint-Pétersbourgஇன் சர்வதேச பொருளாதார நிதியம் (du Forum intபொருளாதார ernational économique de Saint-Pétersbourg.) சந்திப்பில் கலந்துகொள்கின்றார். தவிர, ஈரான், ஈராக் அனு ஒப்பந்தம் தொடர்பாகவும் பல முக்கிய முடிவுகளை விளாதிமிர் புட்டினுடன் இணைந்து எடுக்க உள்ளதாக லீசே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இம்மானுவல் மக்ரோன், இருநாட்கள் பயணமாக தனது மனைவி பிரிஜித் மக்ரோனுடன் பயணமாகியுள்ளார். சனிக்கிழமை காலை அவர்கள் பரிசுக்கு திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை