சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் ரூ.152 கோடி

தினமலர்  தினமலர்
சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் ரூ.152 கோடி

சென்னை : தனி­யார் துறை­யைச் சேர்ந்த, சிட்டி யூனி­யன் வங்­கி­யின் நிகர லாபம், 2017 – -18ம் நிதி­யாண்­டின், ஜன., – மார்ச் வரை­யி­லான நான்­கா­வது காலாண்­டில், 18.04 சத­வீ­தம் உயர்ந்து, 152.12 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இது, 2016- – 17ம் நிதி­யாண்­டின், இதே காலாண்­டில், 128.87 கோடி ரூபா­யாக இருந்­தது.

கும்­ப­கோ­ணத்தை தலை­மை­யி­ட­மா­கக் கொண்டு செயல்­படும் இவ்­வங்­கி­யின் மொத்த வரு­வாய், 6.99 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 925.75 கோடி­யில் இருந்து, 990.48 கோடி ரூபா­யாக ஏற்­றம் கண்­டுள்­ளது. நிகர வட்டி வரு­வாய், 18 சத­வீ­தம் உயர்ந்து, 311 கோடி­யில் இருந்து, 368 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. வங்­கி­யின் மொத்த வாராக் கடன், 2.83 சத­வீ­தத்­தில் இருந்து, 3.03 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. நிகர வாராக் கடன், 1.71 சத­வீ­தத்­தில் இருந்து, 1.70 சத­வீ­த­மா­கக் குறைந்­துள்­ளது.

இது குறித்து, சிட்டி யூனி­யன் வங்கி நிர்­வாக இயக்­கு­ன­ரும், தலைமை செயல் அதி­கா­ரி­யு­மான, என்.காம­கோடி கூறி­ய­தா­வது: தனி­யார் துறை­யில், இதர வங்­கி­க­ளு­டன் ஒப்­பி­டும் போது, சிட்டி யூனி­யன் சிறப்­பான செயல்­பாட்டை கொண்­டி­ருப்­பது திருப்தி அளிக்­கிறது. ஒட்­டு­மொத்த வங்­கித் துறை­யின் வாராக் கடன் உயர்ந்து வரு­கிறது. ஆனால், எங்­கள் வங்­கி­யின் நிகர வாராக் கடன் குறைந்­தி­ருப்­பதை பெரு­மை­யா­கக் கரு­து­கி­றோம். வங்­கிக்கு உள்ள, 800 – -900 கோடி ரூபாய் வாராக் கட­னில், அதி­க­பட்ச தொகையை விரைந்து திரும்­பப் பெற நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. நடப்பு நிதி­யாண்­டில், வங்கி, 18 – -20 சத­வீ­தம் வளர்ச்சி காணும் என எதிர்­பார்க்­கி­றோம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

சிட்டி யூனி­யன் வங்கி, அதன் பங்­கு­தா­ரர்­க­ளுக்கு, கடந்த நிதி­யாண்­டிற்கு, பங்கு ஒன்­றுக்கு, 30 சத­வீ­தம் டிவி­டெண்டு அறி­வித்­துள்­ளது.

மூலக்கதை