வாகன இறக்குமதியால் ஆபத்து? விசாரணைக்கு டிரம்ப் உத்தரவு

தினமலர்  தினமலர்
வாகன இறக்குமதியால் ஆபத்து? விசாரணைக்கு டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன் : வாக­னங்­கள் இறக்­கு­ம­தி­யால், உள்­நாட்டு பாது­காப்­பிற்கு பாதிப்பு ஏற்­ப­டு­கி­றதா என்­பது குறித்து விசா­ரணை நடத்த, அமெ­ரிக்க அதி­பர், டிரம்ப் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

‘‘அமெ­ரிக்­கா­வின் வலி­மைக்கு, வாக­னங்­கள் மற்­றும் வாகன உதி­ரி­பா­கங்­கள் போன்ற முக்­கிய துறை­கள் மிக­வும் இன்­றி­ய­மை­யா­த­வை­யாக உள்­ளன. ‘‘அத­னால், நாட்­டின் பாது­காப்­பிற்கு, டிரக் உள்­ளிட்ட வாக­னங்­கள் மற்­றும் வாகன உதி­ரி­பா­கங்­கள் இறக்­கு­மதி அச்­சு­றுத்­த­லாக உள்­ளதா என்­பது குறித்து விசா­ரிக்க, வர்த்­தக துறை அமைச்­சர், வில்­பர் ராசுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளேன்,’’ என, டிரம்ப் தெரி­வித்­து உள்­ளார்.

டிரம்ப், மார்ச்­சில், வர்த்­தக அமைச்­ச­கத்­தின் பரிந்­து­ரைப்­படி, உருக்கு, அலு­மி­னி­யம் மீது, முறையே, 25 சத­வீ­தம் மற்­றும் 10 சத­வீத வரி விதித்­தார். அத்­து­டன், சீனப் பொருட்­கள் இறக்­கு­ம­திக்கு, 50 ஆயி­ரம் கோடி டாலர் வசூ­லிக்­கும் அள­விற்கு வரி விதிக்­கப்­படும் என, அறி­வித்­தார். இதற்கு பதி­ல­டி­யாக, அமெ­ரிக்­கா­வில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும் பொருட்­க­ளுக்கு, 300 கோடி டாலர் அள­விற்கு வரி விதிக்­கப்­படும் என, சீனா தெரி­வித்­தது.

‘உருக்கு, அலு­மி­னி­யத்­திற்கு விதிக்­கப்­பட்­டுள்ள வரி, சர்­வ­தேச வர்த்­தக விதி­மு­றை­க­ளுக்கு எதி­ரா­னது’ என, உலக வர்த்­தக அமைப்­பி­டம் இந்­தியா முறை­யிட்­டுள்­ளது. இந்­நி­லை­யில், தேசிய பாது­காப்பு என்ற போர்­வை­யில், உருக்கு, அலு­மி­னி­யத்தை தொடர்ந்து, வாக­னங்­கள் இறக்­கு­ம­திக்­கும் அமெ­ரிக்கா அதிக வரி விதிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. டிரம்ப் நட­வ­டிக்­கைக்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்ள சீனா, தேசிய பாது­காப்பு விதி­களை முறை­கே­டாக, பன்­னாட்டு வர்த்­த­கத்­தில் புகுத்­து­வ­தாக, அமெ­ரிக்கா மீது குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது.

மறு­ப­ரி­சீ­லனை:
அமெ­ரிக்­கா­விற்கு வாக­னங்­களை ஏற்­று­மதி செய்­வ­தில், கனடா, மெக்­சிகோ, சீனா, ஜெர்­மனி, பிரே­சில் ஆகிய நாடு­கள் முன்­ன­ணி­யில் உள்­ளன. கடந்த ஆண்டு, மெக்­சிகோ அதி­க­பட்­ச­மாக, 24 லட்­சம்; கனடா, 18 லட்­சம் வாக­னங்­களை ஏற்­று­மதி செய்­துள்­ளன. இந்த இரு நாடு­களும் தாராள வர்த்­தக ஒப்­பந்­தத்­தின் கீழ், வரி விலக்கு பெற்­றுள்­ளன. இந்த ஒப்­பந்­தத்தை மறு­ப­ரி­சீ­லனை செய்ய, அமெ­ரிக்கா முடிவு செய்­துள்­ளது.

மூலக்கதை