வீதி பாதுகாப்பு! - 9 வீதத்தால் அதிகரித்த தண்டப்பண வசூல்!!

PARIS TAMIL  PARIS TAMIL
வீதி பாதுகாப்பு!  9 வீதத்தால் அதிகரித்த தண்டப்பண வசூல்!!

கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, வீதி போக்குவரத்து மீறலுக்கான தண்டப்பண வசூல், 9 வீதத்தால் 2017 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது. 
 
வீதி போக்குவரத்தின் கட்டுப்பாட்டு மீறலுக்கான குற்றப்பண அறவீட்டில், பாதிக்கும் மேல் வீதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்கள் பங்கு வகிக்கின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டில், 1.97 பில்லியன் யூரோக்கள் அரசு தண்டப்பணமாக அறவிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் 1.01 பில்லியன் யூரோக்கள் வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள வேகக்கண்காணிப்பு கமரா மூலம் அறவிடப்பட்டதாகும். 
 
அதேவேளை, மற்றொரு பக்கத்தில், வீதியில் அமைக்கப்பட்டுள்ள வேகக்கண்காணிப்பு கமராக்கள் உடைக்கப்பட்டுள்ள வீதமும் அதிகரித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் 23 கேமராக்கள் உடைக்கப்பட்டிருந்த நிலையில், 2017 அம் ஆண்டில் மொத்தம் 40 கேமராக்கள் முற்றாக அடித்து நொருக்கி சூறையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை