தனுஷ் நடிக்க வேண்டாம் : ரஜினி

தினமலர்  தினமலர்
தனுஷ் நடிக்க வேண்டாம் : ரஜினி

கபாலியை தொடர்ந்து மீண்டும் ரஜினியுடன் ரஞ்சித் இணைந்துள்ள படம் காலா. மும்பை தாராவி பின்னணியில் உருவாகி உள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வருகிற ஜூன் 7-ம் தேதி ரிலீஸாக உள்ளது. காலா படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார்.

காலா படத்தில் ரஜினியுடன் எப்படியாவது ஒரு சின்ன ரோலிலாவது நடித்து விட வேண்டும் என தனுஷ் விரும்பினார். இதை ரஞ்சித்திடமும் தெரிவித்திருக்கிறார்.

ரஞ்சித்தும் தனுஷின் விருப்பத்தை ரஜினியிடம் சொல்லியிருக்கிறார். ரஜினியோ, தனுஷ் என்னுடன் இணைந்து நடிக்க வேண்டாம், தயாரிப்பாளராக மட்டும் இருக்கட்டும் என கூறிவிட்டாராம்.

ரஜினியுடன் நடிக்க முடியவில்லையே என தனுஷ் வருத்தப்பட்டாலும், அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என தன்னை தேற்றிக் கொண்டார்.

மூலக்கதை