ஸ்ருதிஹாசனுக்கு சிபாரிசு செய்த ரவிதேஜா

தினமலர்  தினமலர்
ஸ்ருதிஹாசனுக்கு சிபாரிசு செய்த ரவிதேஜா

விஜய் நடித்து ஹிட்டடித்த தெறி படம் தற்போது தெலுங்கில் ரவிதேஜா நடிப்பில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க சில நடிகைகளின் பெயர்கள் பரிசீலணையில் இருந்தது. கடைசியாக ஸ்ருதிஹாசன் நடிப்பதாக கூறப்பட்டது. என்றாலும் அது உறுதிப்படுத்தப்படாத செய்தியாகவே இருந்தது.

இந்த நிலையில், தற்போது ஹிந்தியில் மகேஷ் மஞ்ரேயர் இயக்கி வரும் படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், அந்த படத்தை முடித்ததும் ரவிதேஜாவுடன் தெறி ரீமேக்கில் நடிக்கிறாராம்.
ரவிதேஜாவுடன் இதற்கு முன்பு ஸ்ருதிஹாசன் நடித்த பல்பு தெலுங்கு படம் வெற்றி பெற்றதால், இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் தான் நடிக்க வேண்டும் என்று அவருக்கு சிபாரிசு செய்திருக்கிறார் ரவிதேஜா.

மூலக்கதை