பிரபாஹின் சாஹோவில் இணைந்த மலையாள நடிகர்

தினமலர்  தினமலர்
பிரபாஹின் சாஹோவில் இணைந்த மலையாள நடிகர்

பாகுபலி-2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. சுஜீத் இயக்கி வரும் இந்த படத்தில் ஸ்ரத்தா கபூர், நீல்நிதின் முகேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில், தற்போது துபாயில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் ஏற்கனவே பல முன்னணி நடிகர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது மலையாள நடிகர் லால் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மூலக்கதை