துப்பாக்கிச்சூடு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

தினகரன்  தினகரன்
துப்பாக்கிச்சூடு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

டெல்லி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவி்டக் கோரி உச்சநீதிமன்ற்தில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மனுத்தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்றது திட்டமிட்ட படுகொலை என்று மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி ஆட்சியா், எஸ்.பி. மீது கொலை வழக்கு பதிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என வழக்கறிஞர் கூறினார். தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க மனுவில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தெரிவித்தார். முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 100-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருப்பினும் போலீசின் அத்துமீறல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. மேலும் அண்ணாநகர் பகுதியில் கமாண்டோ படையினர் அணிவகுப்பை நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இதனால் இன்றும் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியே போர்க்களம் போல கட்சி அளிக்கிறது.

மூலக்கதை