தமிழகத்தில் பல இடங்களில் கடைகள் அடைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் பல இடங்களில் கடைகள் அடைப்பு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகத்தில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியாகினர். இந்த படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியில் கட்சியினர், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்திருந்தார். இதையடுத்து சென்னையில் பெரம்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, தி. நகர்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை முதலே கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

இதே போல தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

இதனால், பொதுமக்களின் இயல்பு நிலை சற்று பாதிக்கப்பட்டது. இது குறித்து வெள்ளையன் அளித்த பேட்டியில், “ தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது  நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு ஒரு ஜனநாயக படுகொலை ஆகும்.

போலீசாரின் காட்டுத்தர்பாரை வன்மையாக கண்டிக்கிறோம். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் வணிகர் சங்கங்கங்களின் பேரவை சார்பில் கடையடைப்பு நடைபெற்று வருகிறது.

பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன” என்றார்.

.

மூலக்கதை