22 நாளாக - இன்றும் தொடரும் பணி பகிஷ்கரிப்பு! - போக்குவரத்து தடை!!

PARIS TAMIL  PARIS TAMIL
22 நாளாக  இன்றும் தொடரும் பணி பகிஷ்கரிப்பு!  போக்குவரத்து தடை!!

இன்று வியாழக்கிழமை SNCF பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பினால் போக்குவரத்து தடைப்பட உள்ளது. 
 
SNCF தொடரூந்து தொழிலாளர்கள் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மட்டும் 20 நாட்களுக்கு மேலாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று புதன்கிழமையைத் தொடர்ந்து, இன்று 22 நாளாக, வியாழக்கிழமையும் போக்குவரத்து தடைப்பட உள்ளது. Transilien மற்றும் TER சேவைகளில் 50 வீதமானவை தடைப்பட உள்ளது. இல்-து-பிரான்சுக்குள் RER A சேவைகள் வழமை போல் இயங்கும் எனவும், RER B மற்றும் RER C, இரண்டில் ஒரு சேவையும் இயங்கும். RER E சேவை ஐந்தில் இரண்டு இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அரசுடன் தொழிற்சங்க அமைப்புகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், தொடர் பணி பகிஷ்கரிப்பில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் தற்போது கடந்த இரு மாதங்களில் பாதிப்புக்குள்ளான பயணிகளுக்கு 50 மாத விலைக்கழிவுடன் கூடிய நவிகோ அட்டை வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.   

மூலக்கதை