கார்த்திக் 52, ரஸ்ஸல் 49* ரன் விளாசல்: ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

தினகரன்  தினகரன்
கார்த்திக் 52, ரஸ்ஸல் 49* ரன் விளாசல்: ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

கொல்கத்தா: ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியுடனான ஐபிஎல் டி20 தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில், ெகால்கத்தா நைட் ரைடர்ஸ்  அணி 25 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ெகால்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குவாலிபயர்-2ல் விளையாட தகுதி பெற்றது.ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீசியது. இரு அணியிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கொல்கத்தா தொடக்க வீரர்களாக சுனில் நரைன், கிறிஸ் லின் களமிறங்கினர். நரைன் 4 ரன் மட்டுமே எடுத்து கவுதம் சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து வந்த உத்தப்பா, ராணா இருவரும் தலா 3 ரன் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர்.ஓரளவு தாக்குப்பிடித்த கிறிஸ் லின் 18 ரன் எடுத்து கோபால் பந்துவீச்சில் அவரிடமே பிடிபட, நைட் ரைடர்ஸ் 8 ஓவரில் 51 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.இந்த நிலையில், கேப்டன் தினேஷ் கார்த்திக் - ஷுப்மான் கில் ஜோடி 5வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 55 ரன் சேர்த்தது. கில் 28 ரன் (17 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆர்ச்சர் வேகத்தில் கிளாசன் வசம் பிடிபட்டார். சிறப்பாக விளையாடிய கார்த்திக் 35 பந்தில் அரை சதம் அடித்தார். அவர் 52 ரன் எடுத்து (38 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) லாப்ளின் பந்துவீச்சில் ரகானே வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்ட ஓவர்களில் ஆந்த்ரே ரஸ்ஸல் சிக்சர்களை பறக்கவிட, நைட் ரைடர்ஸ் ஸ்கோர் எகிறியது. சியர்ல்ஸ் 2 ரன்னில் வெளியேறினார். நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன் குவித்தது. ரஸ்ஸல் 49 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), பியுஷ் சாவ்லா (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராயல்ஸ் பந்துவீச்சில் கவுதம், ஆர்ச்சர், லாப்ளின் தலா 2, கோபால் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. ரகானே, திரிபாதி ஜோடி  களம்  இறங்கினர். நன்றாக விளையாடி இந்த ஜோடி 47 ரன் சேர்த்திருந்த போது,  திரிபாதி 20 ரன்னில் சாவ்லா பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய சாம்சன் அபாரமாக விளையாடினார். ரகானே 46 ரன் எடுத்திருந்த போது குல்தீப் யாதவ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.ஒருபுறம் அரைசதம் அடித்த சாம்சன், சாவ்லா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களால் அணியின் வெற்றிக்கு தேவையான ரன் குவிக்க முடியாமல் திணற, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 144 ரன் எடுத்து 25 ரன்னில் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி வெளியேறியது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, இதே மைதானத்தில் நாளை நடைபெறும் குவாலிபயர்-2 ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.

மூலக்கதை