பிரெஞ்சு காட்டுக்குள் பதுங்கியிருந்த கொள்ளையன்! - ஐந்து மாதங்களின் பின்னர் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரெஞ்சு காட்டுக்குள் பதுங்கியிருந்த கொள்ளையன்!  ஐந்து மாதங்களின் பின்னர் கைது!!

கொள்ளையன் ஒருவர் பிரெஞ்சு காட்டுப்பகுதி ஒன்றுக்குள் வீடு அமைத்து பதுங்கியிருந்த நிலையில், ஐந்து மாதங்களின் பின்னர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான். 
 
முன்னாள் பிரித்தானிய வீரனான இவன், மத்திய பிரான்சில் 40 தடவைகள் திருடியுள்ளான். Surin என்ற சிறு கிராமத்தை ஒட்டியுள்ள காட்டுப்பகுதி ஒன்றில் சிறிய மர வீடு ஒன்றை அமைத்து அங்கு தங்கியுள்ளான். அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் அடிக்கடி திருடியுள்ளான். அங்குள்ள ஒரு வீட்டில் எட்டு தடவைகளுக்கு மேல் சமையலறையில் உள்ள பொருட்களையும், குளிர்சாதன பெட்டியில் உள்ள பொருட்களையும் திருடியுள்ளான். குறித்த வீட்டினர், சமையலறைக்கு இரும்பிலான கதவு போட்டும், கதவை உடைத்து திருடியுள்ளான். மிக நன்றாக வேவு பார்த்து இந்த கொள்ளைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
முன்னதாக, 2017 ஆம் ஆண்டு ஏப்ரலில் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படிருந்தான். ஆனால் அங்கிருந்து தப்பித்து, காணாமல் போன நிலையில், குறித்த குற்றவாளிக்கு பிரெஞ்சு காவல்துறை ஐரோப்பிய பிடியாணை வழங்கியது. அதன் பின்னரே கடந்த வெள்ளிக்கிழமை குறித்த கொள்கையன் கைது செய்யப்பட்டுள்ளான். அவனது மர வீட்டில் இருந்து மடிக்கணனி, நகைகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சமையலுக்காக குடுவையில் அடைக்கப்பட்ட எரிவாயுவையும், பொழுதுபோக்குக்காக பேட்டரியில் இயங்கும் தொலைக்காட்சி ஒன்றையும் அவன் பயன்படுத்தியுள்ளான்.

மூலக்கதை