ரியல் எஸ்டேட்டில் அதிகரித்த தனியார் பங்கு முதலீடு

தினமலர்  தினமலர்
ரியல் எஸ்டேட்டில் அதிகரித்த தனியார் பங்கு முதலீடு

புதுடில்லி : ரியல் எஸ்­டேட் துறை­யில், சில்­லரை விற்­பனை பிரி­வில், மூன்று ஆண்­டு­களில், தனி­யார் பங்கு முத­லீட்டு நிறு­வ­னங்­களின் முத­லீடு, 5,500 கோடி ரூபாய் என்ற அளவை எட்­டி­யுள்­ளது.

இது குறித்து, ரியல் எஸ்­டேட் ஆலோ­சனை நிறு­வ­ன­மான, ஜே.எல்.எல்., இந்­தியா வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: ரியல் எஸ்­டேட் துறை­யில், சில்­லரை விற்­பனை பிரி­வில், 2015 – 18 மார்ச் வரை­யி­லான காலத்­தில், தனி­யார் பங்கு முத­லீடு, 5,500 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.

குறிப்­பாக, வணிக வளா­கங்­களில், ஆர்­வ­மு­டன் முத­லீடு செய்­யப்­ப­டு­கிறது. அத­னால், பல கட்­டு­மான நிறு­வ­னங்­கள், வணிக வளாக திட்­டங்­களில் ஆர்­வம் காட்­டு­வது அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வகை வளா­கங்­க­ளுக்கு, மக்­கள் அதி­கம் கூடும் இடங்­கள் தேர்வு செய்­யப்­ப­டு­கின்றன. அத்­து­டன், கவர்ச்­சி­க­ர­மான வளாக வடி­வ­மைப்பு, அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­கள் உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­ப­டு­கின்றன.

இத்­த­கைய அம்­சங்­களில் பின்­தங்­கி­யுள்ள வணிக வளா­கங்­களில், பல கடை­கள் காலி­யாக உள்ளன. அத்­த­கைய இடங்­களில், சிறிய அலு­வ­ல­கங்­கள், மருத்­து­வ­ம­னை­கள், கல்வி மையங்­கள், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு கூடங்­கள் ஆகி­யவை அமைக்­கப்­ப­டு­கின்றன. மேம்­பட்ட தரத்­தி­லான வணிக வளா­கங்­களில், சரா­ச­ரி­யாக, 8 சத­வீத அள­விற்கே, கடை­கள் விற்­ப­னை­யா­கா­மல் உள்ளன.

வசதி குறை­வான, மோச­மான பரா­ம­ரிப்­பில் உள்ள வணிக வளா­கங்­களில், காலி­யி­டங்­கள், 40 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மாக உள்­ளன. எதிர்­கா­லத்­தில், இது போன்ற வளா­கங்­கள், ‘பிராண்டு’ நிறு­வ­னங்­களின் ஆத­ரவை இழக்­கும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

சில்­லரை விற்­பனையில்..
சமீ­ப­கா­லத்­தில் இல்­லாத வகை­யில், ரியல் எஸ்­டேட் சில்­லரை விற்­பனை பிரி­வில், இந்­தாண்டு, ஜனவரி – மார்ச் காலாண்­டில், 1,000 கோடி ரூபாய் தனி­யார் பங்கு முத­லீடு மேற்­கொள்­ளப்­பட்­டு உள்­ளது. அதில், பெங்­க­ளூ­ரில், ‘எல் அண்ட் டி’ நிறு­வ­னத்­தின் நிலம், 650 கோடி ரூபாய்க்கு, போனிக்ஸ், சி.பி.பி.ஐ.பி., நிறு­வ­னங்­க­ளுக்கு கைமா­றி­ய­தும் அடங்­கும். இது தவிர, நிதே­ஷின், புனே வணிக வளா­கத்­தில், 300 கோடி ரூபாய் முத­லீட்­டில், 85 சத­வீத பங்­கு­கள் வாங்­கப்­பட்­டுள்ளன.

மூலக்கதை