‘இ – வே பில்’ இல்லாவிட்டால் அபராதம்

தினமலர்  தினமலர்
‘இ – வே பில்’ இல்லாவிட்டால் அபராதம்

மாநி­லத்­துக்­குள், ‘இ – வே பில்’ நடை­மு­றைக்கு வந்த பின், சரக்­கு­களை கொண்டு செல்ல, ‘பில்’ இல்­லை­யெ­னில், வரி­யு­டன், 100 சத­வீ­தம் அப­ரா­தம் விதிக்­கப்­படும் என, வணிக வரி அதி­கா­ரி­கள் தெரி­வித்­து உள்­ள­னர்.

மாநி­லங்­க­ளுக்­கி­டையே, 50 ஆயி­ரம் ரூபாய்க்கு மேல் சரக்­கு­களை எடுத்­துச் செல்ல, ‘ஆன்­லைன்’ மூலம் அனு­மதி பெறும், இ – வே பில் நடை­முறை, நாடு முழு­வ­தும், ஏப்., 1ல் அமல்­ப­டுத்­தப்­பட்­டது. மாநி­லத்­துக்கு உள்­ளேயே, சரக்­கு­களை எடுத்­துச் செல்ல, இ –வே பில் பெறும் முறை­யும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. தமி­ழ­கத்­தில், ஜூன் 2ம் தேதி முதல் மாநி­லத்­துக்­குள், இ – வே பில் நடை­மு­றைக்கு வரு­கிறது. இதன் பின், இ – வே பில் இல்­லை­யெ­னில், அப­ரா­தம் விதிக்­கப்­படும் எனக் கூறப்­ப­டு­கிறது.

இது குறித்து, வணிக வரித்­துறை அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது: ஜூன் மாதத்­துக்­குப் பின், மாநி­லத்­துக்­குள்ளே அல்­லது மாநி­லங்­க­ளுக்­கி­டையே, இ – வே பில் பெறா­மல் சரக்­கு­கள் கொண்டு சென்­றால், சரக்­கின் மதிப்­புக்­கேற்ற வரி மற்­றும் 100 சத­வீ­தம் அப­ரா­தம் விதிக்­கப்­படும்.

இ – வே பில்­லில் சிறிய தவ­று­கள் இருந்­தால், தவ­று­க­ளுக்­கேற்ப, 20 ஆயி­ரம் ரூபாய் முதல் அப­ரா­தம் விதிக்­கப்­படும். வரி­யும், அப­ரா­த­மும் செலுத்­திய பின் தான், வாக­னங்­கள் எடுத்­துச் செல்ல அனு­ம­திக்­கப்­படும். சென்­னை­யில் சரக்கு வாக­னங்­களை கண்­கா­ணிக்க, 20 ரோந்து படை­களும், மாவட்­டத்­துக்கு ஒரு ரோந்து படை­யும் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­படும். இவ்­வாறு அதி­கா­ரி­கள் கூறி­னர்.

மூலக்கதை