2.0 டீசரை வெளியிட வேண்டாம் : ரஜினி அறிவுறுத்தல்

தினமலர்  தினமலர்
2.0 டீசரை வெளியிட வேண்டாம் : ரஜினி அறிவுறுத்தல்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்க, 3D தொழில்நுட்பத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் 2.0 படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது.

இந்த படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கெனவே இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பிறகு ரத்து செய்யப்பட்டது. 2.0 படத்தின் தொழில்நுட்ப வேலைகள் முடிவடைய மேலும் பல நாட்கள் தேவை என்ற சூழ்நிலை உருவாகியதால் 2.0 படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

இப்போது 2.0 படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. 2.0 படத்தை மிக விரைவில் ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனை முன்னிட்டு இந்த படத்தின் டீசரை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

மும்பையில் இம்மாதம் 27-ஆம் தேதி நடக்கவிருக்கும் ஐபில் கிரிக்கெட் இறுதிபோட்டியில் 2.0 டீசரை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். இது சம்பந்தமான வேலைகளில் படக்குழுவினர் விறுவிறுப்பாக இயங்கி வருகிறார்கள் என்றும் தகவல் அடிபடுகிறது.

இது குறித்த லைகா தரப்பிலிருந்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் வெளிவரவில்லை. இதற்கிடையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சோகம் நிலவிவரும் இந்த நேரத்ததில் 2.0 டீசரை வெளியிட வேண்டாம் என்று ரஜினி தரப்பிலிருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மூலக்கதை