முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: இங்கிலாந்து - பாகிஸ்தான் மோதும்

தினகரன்  தினகரன்
முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: இங்கிலாந்து  பாகிஸ்தான் மோதும்

லண்டன்: இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அபாரமாக விளையாடிய விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் இடம் பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோரும் இங்கிலாந்து அணிக்காக களமிறங்க உள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் டி20ல் ஸ்டோக்சின் அதிரடி ஆட்டம் எடுபடவில்லை என்றாலும், பாகிஸ்தான் அணிக்கு அவர் சவாலாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், சர்பராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியிலும் அதிரடி பேட்ஸ்மேன்கள் மற்றும் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளதால், இந்த டெஸ்ட் தொடர் மிகவும் சுவாரசியமாக அமையும் என் நம்பலாம். இந்திய அணி அடுத்து இங்கிலாந்து சென்று கடினமான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில், பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.பாகிஸ்தான்: சர்பராஸ் அகமது (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஆசாத் ஷபிக், அஸார் அலி, பாபர் ஆஸம், பாஹீம் அஷ்ரப், பகார் ஸமான், ஹாரிஸ் சொகைல், ஹசன் அலி, இமாம் உல் ஹக், முகமது அப்பாஸ், முகமது ஆமிர், ரகத் அலி, சாத் அலி, சமி அஸ்லம், ஷதாப் கான், உஸ்மான் சலாஹுதின். இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, டொமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர், அலஸ்டர் குக், டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், மார்க் ஸ்டோன்மேன், கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட்.

மூலக்கதை