நெய்மர் தீவிர பயிற்சி

தினகரன்  தினகரன்
நெய்மர் தீவிர பயிற்சி

பிரேசில் கால்பந்து அணி நட்சத்திர வீரர் நெய்மர், பிஎன்ஜி கிளப் அணிக்காக விளையாடியபோது காலில் காயம் அடைந்தார். அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்து வந்த அவர், ரஷ்யாவில் அடுத்த மாதம் தொடங்கும் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்கான பிரேசில் அணியில் தேர்வு செய்யப்பட்டார். அவர் களமிறங்குவது கேள்விக்குறியாக இருந்த நிலையில், முழு உடல்தகுதியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருப்பது ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. டெரசோபோலிஸ் நகரில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் பந்தை லாவகமாக கடத்திச் செல்கிறார் நெய்மர்.

மூலக்கதை