தனியார் இ- – சேவை மையங்கள் எப்போது செயல்பாட்டுக்கு வரும்?

தினமலர்  தினமலர்
தனியார் இ – சேவை மையங்கள் எப்போது செயல்பாட்டுக்கு வரும்?

சென்னை : ‘அரசு துறை­களின், ‘ஆன்­லைன்’ சேவை­களை, தனி­யார் பிர­வு­சிங் மையங்­களில் வழங்­கும் நடை­முறை, விரை­வில் செயல்­பாட்­டுக்கு வர வேண்­டும்’ என, தொழில்­மு­னை­வோர் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

அரசு துறை­களின் சேவை­களை, பொதுச் சேவை மையம் வாயி­லாக, பொது­மக்­கள் எளி­தில் பெறும் வகை­யில், தமி­ழ­கத்­தில், ‘கேபிள் டிவி கார்ப்­ப­ரே­ஷன்’ மூலம் -பொது இ – சேவை மையங்­கள் துவக்­கப்­பட்­டன. ஊழி­யர் பற்­றாக்­குறை, போதிய உப­க­ர­ணம் இல்­லாமை போன்ற பல கார­ணங்­க­ளால், இதன் செயல்­பாடு குறைந்­தது. இத­னால், தனி­யார் பிர­வு­சிங் சென்­டர்­க­ளை­யும், இ- – சேவை மைய­மாக மாற்ற, அரசு முடிவு எடுத்­தது.

இத்­த­கைய சேவை மையங்­கள் மூலம், பிறப்பு, இறப்பு சான்­றி­தழ், ஜாதி சான்­றி­தழ், மக­ளிர் திட்­டங்­கள், விதவை திட்­டங்­கள், மின் சேவை­கள் உள்­ளிட்­ட­வற்றை எளி­தா­க­வும், விரை­வா­க­வும் பெற்­றுக் கொள்­ள­லாம். இதற்­காக, 10 ஆயி­ரம் ரூபாய் முன்­வைப்பு தொகை­யு­டன், தனி­யார் பிர­வு­சிங் சென்­டர் உரி­மை­யா­ளர்­கள், போதிய ஆவ­ணங்­க­ளு­டன் விண்­ணப்­பித்­தி­ருந்­த­னர். கடந்த பிப்ரவரி மாதம் வரை, ஒப்­பந்­தங்­கள் பெறப்­பட்­டன. இது தொடர்­பாக ஆய்வு பணி­கள் முடிந்த நிலை­யில், இன்­னும் அடை­யாள குறி­யீடு எண்­கள் வழங்­கப்­ப­டா­மல் உள்ளன.

இது குறித்து, தொழில்­மு­னை­வோர் ராஜ­க­ண­பதி கூறி­ய­தா­வது: ஆய்­வுப் பணி­கள் முற்­றி­லும் முடிந்து, மாந­க­ராட்சி, நக­ராட்சி, பேரூ­ராட்­சி­க­ளுக்கு வரி­சை­யாக அனு­மதி வழங்­கப்­படும் என, அதி­கா­ரி­கள் கூறி­உள்­ள­னர். தற்­போது பள்­ளி­கள் திறக்­கப்­படும் சூழ்­நி­லை­யில், ஜாதி சான்று, இருப்­பிட சான்று, வரு­மான சான்று போன்ற பல கார­ணங்­க­ளுக்­காக மக்­கள், ஆன்­லைன் சேவை மையங்­களை நாடத் துவங்­கி­யுள்­ள­னர். மே இறுதி அல்­லது ஜூனில், தனி­யார் பிர­வு­சிங் மையங்­களில், அரசு இ – சேவை மையங்­கள் செயல்­பாட்­டுக்கு வந்­தால், மக்­க­ளுக்கு உத­வி­யாக இருக்­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை