இந்தியாவில் அதிகரிக்கும் பெருங்கோடீஸ்வரர்கள்

தினமலர்  தினமலர்
இந்தியாவில் அதிகரிக்கும் பெருங்கோடீஸ்வரர்கள்

புதுடில்லி : மொரீ­ஷி­ய­சைச் சேர்ந்த, ஆப்­ரே­ஷியா வங்கி வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: இந்­தி­யா­வில் தற்­போது, 119 பெருங்­கோ­டீஸ்­வ­ரர்­கள் உள்­ள­னர். அடுத்த, 10 ஆண்­டு­களில், இந்­தி­யா­வில் கூடு­த­லாக, 238 பெருங்­கோ­டீஸ்­வ­ரர்­கள் உரு­வா­வர். இது, சீனா­வில், 448 ஆக இருக்­கும்.

அமெ­ரிக்­கா­வில், அதி­க­பட்­சம், 884 பெருங்­கோ­டீஸ்­வ­ரர்­கள் இருப்­பர். சீனா, 697 பேரு­டன், இரண்­டா­வது இடத்தை பிடிக்­கும். இந்­தியா, 357 பேரு­டன், மூன்­றா­வது இடத்­தில் இருக்­கும். 100 கோடி டால­ருக்­கும் அதி­க­மான சொத்து உள்­ளோர், பெருங்­கோ­டீஸ்­வ­ரர் பிரி­வில் அடங்­கு­வர். இது, இந்­திய ரூபாய் மதிப்­பில், 6,800 கோடி­யா­கும்.

வரும், 2027ல், ரஷ்­யா­வில், 142 பெருங்­கோ­டீஸ்­வ­ரர்­கள் உரு­வா­வர். இது, பிரிட்­டன், ஜெர்­மனி மற்­றும் ஹாங்­காங்­கில் முறையே, 113, 90 மற்­றும், 78 ஆக இருக்­கும்.உல­க­ள­வில் தற்­போது, 2,252 பெருங்­கோ­டீஸ்­வ­ரர்­கள் உள்­ள­னர். இது, அடுத்த, 10 ஆண்­டு­ களில், 3,444 ஆக அதி­க­ரிக்­கும்.

தனி நபர் சொத்து மதிப்­பில், இந்­தியா, 8.23 லட்­சம் கோடி டால­ரு­டன், ஆறா­வது இடத்­தில் உள்­ளது. அமெ­ரிக்கா, சீனா, ஜப்­பான் ஆகி­யவை, முதல் மூன்று இடங்­களில் உள்ளன.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை