சுஜா வருணியுடன் காதலை உறுதி செய்தார் சிவாஜிதேவ்

தினமலர்  தினமலர்
சுஜா வருணியுடன் காதலை உறுதி செய்தார் சிவாஜிதேவ்

சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜிதேவ், சிங்ககுட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். நடிகை ஸ்ரீப்ரியாவின் அக்காதான் சிவாஜிதேவின் தாயார். தற்போது சிவாஜிதேவ் என்ற தனது புனைப்பெயரை துறந்து சிவகுமார் என்ற இயற்பெயரிலேயே நடித்து வருகிறார்.

சிவகுமாரும், நடிகை சுஜா வாருணியும் திருப்பதியில் ஒன்றாக இணைந்து எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை சுஜா வருணி மறுத்திருந்தார்.

இந்த நிலையில் சிவகுமார் தன் காதலை ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சுஜாவின் ரசிகர்களுக்கும், மீடியா நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், நானும் சுஜாவும் கடந்த 11 வருடங்களாக காதலித்து வருகிறோம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுஜா சொன்ன அத்தான், நான் தான்.

எங்களது திருமணத்தை முறைப்படி அறிவிப்போம். இப்போது நான் சிவகுமார் என்ற பெயரில் படங்களில் நடிக்க இருக்கிறேன். எங்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து இதுகுறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்கிறார் சிவகுமார் என்கிற சிவாஜிதேவ்.

மூலக்கதை