பணி பகிஷ்கரிப்பு! - இன்றைய போக்குவரத்து தடை நிலவரங்கள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பணி பகிஷ்கரிப்பு!  இன்றைய போக்குவரத்து தடை நிலவரங்கள்!!

இன்று புதன்கிழமை, மே 23 ஆம் திகதி, SNCF தொடரூந்து தொழிலாளர்களின் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற உள்ளதைத் தொடர்ந்து, போக்குவரத்து கணிசமாக பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இல்-து-பிரான்சுக்குள் RER A பெரிதளவில் பாதிப்புக்குள்ளாகாது எனவும், RER B மற்றும் RER C  சேவைகளில் இரண்டில் ஒன்று மாத்திரமே இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. RED D Sud சேவைகளில் நான்கில் இரண்டும், RER D Nord சேவைகளில் ஐந்தில் இரண்டும் இயங்கும் எனவும், RER E ஐந்தில் இரண்டும் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
TGV சேவைகளில் ஐந்தில் மூன்று சேவைகள் இயங்கும். Intercités களில் ஐந்தில் இரண்டு தொடரூந்துகள் இயங்கும். அதேவேளை சர்வதேச சேவைகளான Eurostar, Thalys மற்றும் Lyria ஆகிய சேவைகள் இரண்டில் ஒன்று இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை