சில்லி பாய்ன்ட்....

தினகரன்  தினகரன்

* வங்கதேச கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசகராக, தென் ஆப்ரிக்காவை சேர்ந்த கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையை சேர்ந்த சந்திகா ஹதுரசிங்கா கடந்த ஆண்டு அக்டோபரில் பதவி விலகிய பிறகு, தலைமை பயிற்சியாளர் இல்லாமலேயே வங்கதேச அணி விளையாடி வருகிறது.* இந்திய அணி ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இன்டர்கான்டினென்டல் கோப்பை தொடர், மும்பையில் ஜூன் 1ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, சீன தைபே, கென்யா, நியூசிலாந்து அணிகள் களமிறங்குகின்றன. தொடக்க லீக் ஆட்டத்தில் சீன தைபே அணியுடன் மோதும் இந்தியா, 4ம் தேதி கென்யாவையும், 7ம் தேதி நியூசிலாந்தையும் எதிர்கொள்கிறது.* ஜெர்மனியின் மூனிச் நகரில் இன்று தொடங்கும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தொடரில், இந்தியா சார்பில் ஜித்து ராய், ககன் நரங், சஞ்சீவ் ராஜ்புத், செயின் சிங், மானு பேக்கர், ஹீனா சித்து, அஞ்சும் மோத்கில், தேஜஸ்வினி சாவந்த் உள்பட நட்சத்திர வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.* ரஷ்யாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி கேன் * இந்திய துப்பாக்கிசுடுதல் வீரர் ககன் நரங், 135 இளம் வீரர், வீராங்கனைகளுக்கு தனது அகடமியில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

மூலக்கதை