ஏறு­மு­கத்­தில் காய்­க­றி­கள் விலை

தினமலர்  தினமலர்
ஏறு­மு­கத்­தில் காய்­க­றி­கள் விலை

சென்னை : வெயில் கார­ண­மாக, காய்­க­றி­க­ளின் விலை ஏறு­மு­கத்­தில் சென்று கொண்­டி­ருக்­கிறது.

கோயம்­பேடு காய்­கறி சந்­தை­யில், வெயில் மற்­றும் முகூர்த்த நாள் கார­ண­மாக தேவை அதி­க­ரித்­துள்­ள­தால், முக்­கிய காய்­க­றி­க­ளின் விலை ஏறு­மு­கத்­தில் உள்­ளது. மொத்­த­வி­லை­யில், பீன்ஸ் ஒரு கிலோ அதி­க­பட்­சம், 70 ரூபா­யாக உள்­ளது. அவரை, 45 ரூபாய்க்­கும், கேரட், 35 – 40 ரூபாய்க்­கும், புட­லங்­காய், கொத்­த­வ­ரங்­காய், உரு­ளைக்­கி­ழங்கு, 20– 28 ரூபாய்க்­கும்; பாகற்­காய், 35 ரூபாய்க்­கும் விற்­ப­னை­யா­கிறது.

ஒரு கிலோ இஞ்சி விலை, 100 ரூபாயை தொட்ட நிலை­யில், சில நாட்­க­ளுக்கு முன், 50 ரூபா­யாக விலை குறைந்து காணப்­பட்­டது. தற்­போது மீண்­டும் விலை அதி­க­ரித்து, 1 கிலோ இஞ்சி, மொத்த விலை­யில், 70-80 ரூபா­யாக உள்­ளது. சில்­லரை விலை­யில், 100 ரூபாய் வரை விற்­கப்­ப­டு­கிறது.

பீட்­ரூட், சவ்­சவ், சேனைக்­கி­ழங்கு, கத்­திரி, வெண்­டைக்­காய், கோவக்­காய், பச்சை மிள­காய், நுால்கோல் முருங்­கைக்­காய் உள்­ளிட்­டவை, 20 – 25 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கிறது. வாழைக்­காய் ஒன்­றின் விலை, மொத்த விலை­யில், 7 ரூபா­யாக உள்­ளது. குறைந்­த­பட்ச விலை­யில், முட்­டை­கோஸ், 15 ரூபாய்க்­கும், பெரிய வெங்­கா­யம், 18 ரூபாய்க்­கும் விற்­ப­னை­யா­கிறது.

மூலக்கதை