சாத்­துக்­குடி வரத்து அதி­க­ரிப்பு

தினமலர்  தினமலர்
சாத்­துக்­குடி வரத்து அதி­க­ரிப்பு

சென்னை : கோயம்­பேடு சந்­தை­யில் முதல் ரக சாத்­துக்­குடி வரத்து அதி­க­ரித்­துள்­ளது.

கோயம்­பேடு காய்­கனி சந்­தை­யில், சாத்­துக்­குடி, மாம்­பழ வரத்து அதி­க­ரித்­துள்­ளது. வெயில் கார­ண­மாக பழங்­க­ளின் தேவை அதி­க­ரித்­துள்­ளது. இதில் சாத்­துக்­குடி, மாம்­ப­ழம் உள்­ளிட்­ட­வற்­றின் வரத்து அதி­க­ரிப்பு கார­ண­மாக, விலை­ குறை­யத் துவங்­கி­யுள்­ளது. ஆந்­திரா, ஐத­ரா­பாத் உள்­ளிட்ட பகு­தி­க­ளி­லி­ருந்து கோயம்­பேடு சந்­தைக்கு சாத்­துக்­குடி வரத்து அதி­க­ரித்­துள்­ளது. நேற்று, 15 லாரி­க­ளின் சாத்­துக்­குடி இறக்­கு­ம­தி­யா­னது.

இது­ கு­றித்து பழ கமி­ஷன் சங்க தலை­வர் சீனி­வா­சன் கூறி­ய­தா­வது: இந்­தாண்டு சாத்­துக்­குடி கொள்­மு­தல் விலை, கடந்­தாண்டை விட, ஒரு மடங்கு அதி­க­ரித்­துள்­ளது. அனந்­த­பூ­ரில் இருந்து முதல் ரக சாத்­துக்­குடி அதி­க­ளவு வந்­துள்­ளது. மொத்த விலை­யில், ஒரு கிலோ­வுக்கு, 60 – 85 ரூபாய் வரை­யி­லும், சில்­லரை விலை­யில், 100 – 110 ரூபாய் வரை­யும் உள்­ளது. இரண்­டாம் ரக சாத்­துக்­குடி, 70 – 85 வரை­யி­லும்; மூன்­றாம் ரக சாத்­துக்­குடி, 50 – 65 வரை­யி­லும் உள்­ளது.

அதே போல் ஆந்­தி­ரா­வில் இருந்து பங்­க­னப்­பள்ளி, ஹிமாம்­ப­சந்த் மாம்­பழ வரத்­தும் அதி­க­ரித்­துள்­ளது. மொத்த விலை­யில் பங்­க­னப்­பள்ளி, 1 கிலோ, 25 – 40 ரூபாய்க்கு கிடைக்­கிறது. ஜூன் இறுதி அல்­லது ஜூலை மாத துவக்­கத்­தில், ருமானி வரத்து இருக்­கும். சீசன் பழ­மான பலாப்­ப­ழம் ஒன்று சைசுக்கு ஏற்ப, 300 – 1,000 ரூபாய் வரை விற்­ப­னை­யா­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை