பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க கோல்டுமேன் சாக்ஸ் இலவச கல்வி பயிற்சி

தினமலர்  தினமலர்
பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க கோல்டுமேன் சாக்ஸ் இலவச கல்வி பயிற்சி

புதுடில்லி : கோல்­டு­மேன் சாக்ஸ் பவுண்­டே­ஷன் நிறு­வ­னம், கோர்­செரா நிறு­வ­னத்­து­டன் இணைந்து, பெண் தொழில்­மு­னை­வோ­ருக்கு, வலை­த­ளம் வாயி­லாக இல­வச கல்­விப் பயிற்சி அளிக்­கத் துவங்­கி­யுள்­ளது.

அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, கோல்­டு­மேன் சாக்ஸ் குழு­மம், நிதிச் சேவை­கள் துறை­யில் செயல்­பட்டு வரு­கிறது. இக்­கு­ழு­மத்­தின் ஓர் அங்­க­மான, கோல்­டு­மேன் சாக்ஸ் பவுண்­டே­ஷன், உல­க­ள­வில், மக்­க­ளின் ஆரோக்­கி­யம், கல்வி ஆகி­ய­வற்றை மேம்­ப­டுத்­தும் சேவை­களில் ஈடு­பட்­டுள்­ளது. இந்­நி­று­வ­னம், 2008ல், பெண் தொழில்­மு­னை­வோரை முன்­னேற்­றும் நோக்­கில், 'கோல்­டு­மேன் சாக்ஸ் – 10,000 பெண்­கள்' என்ற திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

இத்­திட்­டத்­தில், தொழில் புரி­யும் பெண்­க­ளுக்கு, அவர்­க­ளின் துறை­களில் மேம்­பட்ட முறை­யில் செயல்­ப­டு­வ­தற்­கான நிர்­வாக பயிற்சி அளிக்­கப்­ப­டு­கிறது. அந்­தந்த துறை­களில், முன்­னோ­டி­க­ளாக உள்­ளோ­ரின் வழி­காட்­டு­த­லு­டன், நவீன தொழில்­நுட்ப விப­ரங்­கள்; சர்­வ­தேச வர்த்­தக தொடர்பு; நிதி­யு­தவி பெறு­வ­தற்­கான ஆலோ­ச­னை­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

இது குறித்து, கோல்­டு­மேன் சாக்ஸ் பவுண்­டே­ஷன் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: பெண் தொழில்­மு­னை­வோரை மேம்­ப­டுத்­தும் திட்­டத்­தில், இது­வரை, 10 ஆயிரத்­திற்­கும் அதி­க­மா­னோர் பயன் பெற்­றுள்­ள­னர். 70 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மான பெண் பட்­ட­தா­ரி­கள், அதிக வரு­வாய் ஈட்­டு­கின்­ற­னர். இத்­திட்­டத்­தின் மூலம், 60 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மான புதிய வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கி­ உள்­ளன.

தற்­போது, வலை­த­ளம் வாயி­லான கல்­விப் பயிற்சி துவக்­கப்­பட்­டுள்­ளது. இப்­ப­யிற்சி, அனை­வ­ருக்­கும் இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டு­கிறது. குறைந்­த­பட்­சம், மூன்று தொழி­லா­ளர்­க­ளு­டன், ஆண்­டுக்கு, 50 ஆயி­ரம் டாலர் வரு­வாய், அதா­வது இந்­திய ரூபா­யில், 33 லட்­சம் ஈட்­டு­வோ­ருக்கு, பயிற்­சி­யின் முடி­வில் சான்­றி­தழ் வழங்­கப்­படும். இத்­திட்­டம், பெண் தொழில்­மு­னை­வோ­ரின் திறனை மேம்­ப­டுத்தி, அவர்­க­ளின் வர்த்­தக உத்­தி­களை, செயல்­ப­டுத்­து­வ­தற்கு களம் அமைத்து கொடுக்­கும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை